200 பெண் போலீசார் பார்த்த சினிமா; படத்துல அப்படி என்னதா சிறப்பு! என்ன படம்னு தெரியுமா?meega-mega-avasaram-tamil-movie

200 பெண் போலீசார் காவலர் தினத்தை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் வகையில் மிக மிக அவசரம் என்ற திரைப்படத்தை பார்த்துள்ளனர்.

அமைதிப்படை 2 , கங்காரு ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். பெண் காவலர்களை மையப்படுத்தி பணியிடங்களில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைக்கும் விதமாக மிக மிக அவசரம் படம் அமைந்துள்ளது.

இயக்குனர் சீமான், ஈ.ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் பெண் காவலர்  கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்கா தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் காவலர் தினத்தன்று அதனை சிறப்பித்து கொண்டாடும் வகையில் 200 பெண் போலீசார் இந்த படத்தை பார்த்து தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

Tamil Spark

இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, ‘‘பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படம் அல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை படம் சொல்கிறது’’ என்றார்.