பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
அட.. சூப்பர்! விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன்! வெளிவந்த அசத்தலான அப்டேட்!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கிய அவர் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.
மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் இவரது படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. இந்த படத்தில் சரத்குமார், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
#MazhaiPidikkathaManithan #மழைபிடிக்காதமனிதன்
— Infiniti Film Ventures (@FvInfiniti) March 14, 2022
Dubbing started with Pooja today. Looking forward to the completion of the film soon🏆💪@FvInfiniti @vijaymilton @vijayantony @bKamalBohra @pradeepfab @lalithagd 💐👍 pic.twitter.com/TM2aaNPYLW
இந்த நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.