அப்படிப்போடு.. மீண்டும் குடும்பங்கள் கொண்டாடும் அசல் வெற்றி: தயாரிக்கிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்.!



Mayandi Kudumbathar 2 Movie Announcement 

 

ராசு மதுரவன் இயக்கத்தில், நடிகர்கள் தருண் கோபி, சீமான், மணிவண்ணன், பொன்வண்ணன், பூங்கொடி, ரவி மரியா, சிங்கம்புலி, ஜி.எம் குமார், இளவரசு உட்பட பலர் நடித்து உருவாகிய திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். 

சபேஷ்-முரளி படத்தின் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தார். கடந்த 2009ம் ஆண்டு குடும்ப பாசத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம், பல மாதங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. பாக்ஸ் ஆபிசில் ரூ.5.8 மில்லியன் வசூல் செய்தது. 

தமிழ்நாடு அரசின் உயரிய சிறந்த திரைப்பட விருதையும் பெற்றது. இந்நிலையில், இப்படத்தை தயாரித்து வழங்கிய யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம், தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க இருக்கிறது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், படத்தை கே.பி ஜெகன் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. முந்தைய பாகத்தில் நடித்த திரை நட்சத்திரங்கள் அனைவரும் இப்படத்தில் நடிப்பார்கள் என்றும் படத்தயாரிப்பு குழு கூறியுள்ளது.