சினிமா

நான் கையை அறுத்து, தற்கொலைக்கு முயற்சி செய்ய இவர்கள்தான் காரணம்.! முதன் முதலாக போட்டுடைத்த மதுமிதா!!

Summary:

MATHUMITHA TALK ABOUT HER SUICIDE IN BIGBOSS

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார் பிக்பாஸ்.

Image result for bigboss mathumitha

இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது. அதனை தொடர்ந்து மதுமிதா கொலைமிரட்டல் விடுத்ததாக விஜய் டிவி சார்பில் மதுமிதா மீது புகார் அளிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து பரபரப்புடன் இதற்கு மதுமிதா விளக்கமளித்தார். பின்னர் விஜய் டிவியின் ஒப்பந்தப்படி எதுவும் தற்போது வெளியில் சொல்லக்கூடாது என எதுவும் சொல்லாமல் இருந்தார்.

இந்நிலையில்  தற்போது மதுமிதா தான் எதனால் கையை அறுத்துக்கொண்டார் என்பது குறித்து தற்போது மதுமிதா முதல் முறையாக மனம் திறந்துள்ளார். அப்பொழுது அவர் வாட்ஸ் அப்பில் வைக்கின்ற ஸ்டேட்டஸ் போல் உங்களது கருத்துக்களை கூறுங்கள். அதனை Hello App பதிவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அப்பொழுது வர்ண பகவானும் கர்நாடகாவை சேர்த்தவரோ மறை வடிவில் கூட மழை தர மறுக்கிறார் என கவிதை கூறியுள்ளார். அதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் அரசியல் ஆக்கி வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும் நான் தற்கொலை முயற்சி எடுத்தபோது கஸ்தூரியும், சேரனும்தான் என்னை காப்பாற்ற முயற்சி செய்தனர். மற்றவர்கள் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 


Advertisement