
mathumetha told the truth
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இது வரை 7 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது மதுமிதா ஒரு பேட்டியில், எனது தற்கொலை முயற்சிக்கு இவர் தான் காரணம் என உண்மையை கூறியுள்ளார்.அதாவது தனியார் ஆப் ஒன்றின் ப்ரோமோஷனுக்காக டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது நான் "வருண பகவான் கூட கர்நாடககாரர் போல இருக்கு, நமக்கு மழையே தர மாட்டேங்கிறார்" என்று கூறினேன்.
இதனால் கடுப்பான நடிகை ஷெரின் கடுமையாக ’நான் ஒரு கர்நாடக பெண்ணாக இருக்கும் நிலையில் நீங்கள் எப்படி இப்படியான கருத்தை கூறலாம்' என்று கேட்டார்.மேலும் நீ ஏன் எப்பவும் தமிழ் பெண், தமிழ் கலாச்சாரம் என்று கூறிக்கொண்டு இருக்கிறாய். தமிழுக்காக உயிரை கொடுக்க முடியுமா? என்று கூறினார். என் வாதத்தை நிருபிக்க நான் கையை அறுத்து நிருபித்தேன் என்று கூறினார்.
Advertisement
Advertisement