தன் மகனுக்காக துபாய்க்கு குடிபெயரும் நடிகர் மாதவன்! அதுவும் எதற்காக பார்த்தீங்களா!!

தன் மகனுக்காக துபாய்க்கு குடிபெயரும் நடிகர் மாதவன்! அதுவும் எதற்காக பார்த்தீங்களா!!


Mathavan move dupai for her son

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்று பிரபலமானவர் நடிகர் மாதவன். அதனைத் தொடர்ந்து முதலில் சாக்லேட் பாயாக வலம்வந்த அவர் பின்னர் ஆக்ஷன் ஹீரோவாகவும் களமிறங்கி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் செம பிஸியாக நடித்து வருகிறார். 

நடிகர் மாதவன் 1999 ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளான். வேதாந்த் ஒரு இந்திய நீச்சல் வீரர். அவர் இதுவரை நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம், விருதுகளை வென்றுள்ளார். மேலும் அண்மையில் கூட பெங்களூரில் நடந்த 47th Junior National Aquatic Championships 2021 நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 7 பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்தார்.

mathavan

இந்நிலையில் வேதாந்த் 2026-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் மகனின் நீச்சல் பயிற்சிக்காக மாதவன் குடும்பத்துடன் துபாயில் குடியேறியுள்ளார். இதுகுறித்து அவரே வெளியிட்டுள்ள தகவலில், என் மகன் வேதாந்த், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். அதற்காக பெரிய நீச்சல் குளங்கள் தேவை. ஆனால் மும்பையில் கொரோனா காரணமாக நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளது. அதனால் நான் குடும்பத்துடன் துபாயில் குடியேறியுள்ளேன் என கூறியுள்ளார்.