நெஞ்சமே பதறுதே... 1 வயது குழந்தை பலாத்காரம்.!! 32 வயது நபர் வெறி செயல்.!!



32-year-old-man-arrested-for-sexually-assaulting-1-year

தலைநகர் டெல்லியில் 1 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குழந்தையின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 32 வயது இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க நபர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று அந்த நபர் தனது வீட்டின் அருகே வசிக்கும் 1 வயது குழந்தையை தனது அறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது அறையிலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டிருக்கிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் அவரது அறை கதவை தட்டியிருக்கிறார். எவ்வளவு தட்டியும் அந்த நபர் கதவை திறக்கவில்லை.

India

இதனையடுத்து குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குழந்தை வலியால் கதறி துடித்துக் கொண்டிருந்தது. மேலும் குழந்தையின் அந்தரங்கப் பகுதியில் இருந்தும் ரத்தம் வடிந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.!! எமனாக மாறிய மச்சான்.!!

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பச்சிளம் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நபரை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: "என் ஆளு மேலயே கைய வைப்பியா.." காதலியின் தந்தை மீது தாக்குதல்.!! ரவுடி உட்பட இருவர் கைது.!!