சினிமா

வருகிறார் வாத்தி.. நாளை வெளியாகிறது மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடல்!

Summary:

Master second single release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 'வாத்தி' நாளை வெளியாகவுள்ளது.

அனிருத் இசையில் விஜய்யின் குரலில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் படத்தின் 'குட்டி ஸ்டோரி' பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடல் யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 1.5 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

மேலும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் நேரடி ஒளிபரப்பு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான 'வாத்தி' நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement