234 தொகுதியும் சைலண்டா இருக்கனும்..! 2021 இல் நாங்கதான்..! விஜய் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்..!

Master second look viral fan poster


Master second look viral fan poster

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துவருகிறார் தளபதி விஜய். படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் கடந்த 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

master

இந்த போஸ்டரில் நடிகர் விஜய் மட்டுமே கருப்பு நிற உடையில் தோன்றியுள்ளார். அதில், வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று விஜய் கூறுவது புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை பயன்படுத்தி 234 தொகுதியும் சைலண்டா இருக்கனும். 2021-ல் நாங்க தான் இருக்கனும். மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் மாண்புமிகு தளபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேடைகளில் விஜய் அரசியல் பேசிவருவதும், விஜய்யின் தந்தையும் தொடர்ந்து அரசியல் குறித்து விமர்சித்து வரும் நிலையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


master