மாஸ்டர் படம் ரிலீஸ்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிக்கை.. தளபதி ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்..master-movie-release-latest-update

மாஸ்டர் படத்தின் ரீலிஸ் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவது தாமதமானது.

இதனால் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியலாம் என கூறப்பட்டது. ஆனால் திரையரங்கம் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு படம் திரையரங்கில்தான் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

master

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி இருப்பதால் மாஸ்டர் படம் இன்றுவரை வெளியாகாமல் உள்ளது. இதனிடையே கடந்த தீபாவளி அன்று படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்தது.

இதனால் பல்வேறு முன்னணி ஓடிடி தளங்கள் மாஸ்டர் படத்தை வாங்க போட்டிபோட்டும் நிலையில் பிரபல ஓடிடி தளம் ஒன்று மாஸ்டர் படத்தை வாங்கிவிட்டதாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர், "ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். இதனால் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை என உறுதியாகியுள்ளது.