மார்க் ஆண்டனி பட வெற்றிக்கு காரணம் தலயா? தளபதியா? மோதலை ஏற்படுத்திய படக்குழு..

மார்க் ஆண்டனி பட வெற்றிக்கு காரணம் தலயா? தளபதியா? மோதலை ஏற்படுத்திய படக்குழு..


Mark Antony success meet

சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம். இப்படம் வெற்றியடைய தல தான் காரணம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

Kollywood

கடந்த மாதம் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ஒரு காமெடி பிளாக்பஸ்டர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கொண்டு வந்த சில்க் ஸ்மிதாவின் கேரக்டர் இளசுகளிடையே பெரும் பேச்சாக வலம் வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களின் இசையும் வலு சேர்க்கிறது.

படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கினார். அந்த இரண்டு திரைப்படங்களுமே பெரிதாக வெற்றி பெறாமல் போனது. 

Kollywood

சமீபத்தில் நடிகர் அஜித்துடன் ஏற்பட்ட சந்திப்பில் இதற்கு மேலும் நல்ல திரைப்படங்களை இயக்குவீர்கள் என நம்பிக்கையூட்டியதாகவும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில்  தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் வெற்றியை அவருக்கு சமர்ப்பித்ததாகவும் கூறி இருக்கிறார். இதற்கு முன்னதாக நடிகர் விஷால் விஜய்க்கு நன்றி கூறி பதிவு வெளியிட்டிருந்தார். திரைப்படத்திலும் விஜ்யின் பெயர் வெளியிடபட்டது. இதுகுறித்து தல, தளபதி ரசிகர்கள் இணையத்தில்  மோதிக்கொண்டுள்ளனர்