புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ் "கருப்பி" மரணம்; வாகனம் மோதி சோகம்.!
தீபாவளி பட்டாசு சத்தம் பயத்தில் சாலையில் ஓடிய கருப்பி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சோகம் நடந்துள்ளது.
தமிழ் திரையுலகில் இன்று மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள் (Pariyerum Perumal). இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
படத்தில் நாயகனுடன் கருப்பி எனப்படும் நாய் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். கருப்பியும் - நாயகனும் இணைந்து இருக்கும் காட்சிகளும், பின் நடந்த நிகழ்வுகளும் இன்று வரை கண்களில் இருந்து மறையாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: என்னாச்சு?.. நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி.!
நாய் கருப்பி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரின் செல்லப்பிராணியான கருப்பி, பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் வாயிலாக இயக்குனர் தனது கருத்துக்களும் வெளிப்படுத்தி இருந்தார்.
விபத்தில் மரணம்
இதனிடையே, 2024 தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்து பலரும் கொண்டாடிய நிலையில், பட்டாசு சத்தத்தால் பதறிப்போன கருப்பி, சாலையில் ஓடி இருக்கிறது. அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கருப்பி படுகாயமடைந்து பலியானது.
உடல் நல்லடக்கம்
இதனால் அதன் உடல் ஊர் மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த தகவல் தற்போது தெரியவந்து ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதே கிராமத்தில் தான் இயக்குனர் மாரி செல்வராஜும் பிறந்து வளர்த்தார். அதனால்தான் அவருக்கு மண்மீதான பாசம் அதிகம் இருந்து, அப்பகுதிகளை மையமாக வைத்து பல திரைப்படங்களும், அதன் வாயிலாக சமூக கருத்துக்களையும் முன்வைக்கிறார்.
RIP, ‘Pariyerum Perumal’ Karuppi 😭💔🐾 pic.twitter.com/j3ebs6mL8L
— Sagala (@belikesagala) November 1, 2024
இதையும் படிங்க: அமரன் படம் எப்படி?.. வெளியானது புளூ சட்டை மாறனின் ரிவியூ..!