சினிமா

90 களில் கலக்கிய நடிகை மந்த்ரா வீட்டில் திடீர் சோதனை! சிக்கியது என்ன தெரியுமா?

Summary:

Manthra ride

தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. அதனை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய், அஜித், ஜீவா, சரத்குமார் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டிலாகி விட்டார். மேலும் இவர் கலர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர். சமீபத்தில் கலர்ஸ் நிறுவன கிளைகள் எங்கும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் நாடு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள நடிகை மந்த்ரா வீட்டில் திடீரென அதிகாரிகள் வருமான வரி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டிலிருந்து பணம் பறிமுதல் செய்யவில்லை. வேறும் ஆவணங்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement