சினிமா

வில்லன், காமெடியன் என அசத்திய நடிகர் மன்சூர் அலிகானுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்!

Summary:

Mansur alikan

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவரது நடிப்பில் வெளியான எத்தனையோ தமிழ் படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. கேப்டன் பிரபாகரன், அதிரடிப்படை போன்ற பல்வேறு வெற்றிப்படங்கள் இவரது நடிப்புக்கு உதாரணமாக கூறலாம்.

பல்வேறு படங்களில் நடித்துள்ள மன்சூரலிகான் சமீபத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்விபெற்றர் நடிகர் மன்சூர் அலிகான்.

இந்நிலையில் தற்போது புதிதாக ஹுரோ அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதற்காக இவர் 120 கிலோவிலிருந்து 90 கிலோவாக தனது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் இன்னும் தனது உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். 

மேலும் இவர் இதுவரை மிக சிறந்த வில்லன், காமெடியன் என்பதை தாண்டி ஹுரோவாக அவதாரம் எடுத்துள்ள மன்சூர் அலிகானின் அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 


Advertisement