அசுரன் பட நடிகைக்கு நேர்ந்த துயரம்! பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ரத்து! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

அசுரன் பட நடிகைக்கு நேர்ந்த துயரம்! பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ரத்து! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!


Manju warriar got accident in shooting spot

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அசுரன். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்தவர் மஞ்சு வாரியார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் அசுரன்  படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு தமிழில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது சதுர்முகம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படம் திகில் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் மஞ்சுவாரியர் தொழிலதிபராக நடித்துவருகிறார். 

manju warrier

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்தது. இதில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது, மஞ்சுவாரியார் டூப் வேண்டாம் நானே செய்கிறேன் என கூறி கயிறு கட்டிக்கொண்டு உயரத்திலிருந்து கீழே குதித்துள்ளார். அப்பொழுது அவரது கால்.மற்றும் இடுப்பு பகுதியில் பலமான காயங்கள் ஏற்பட்டது.

மேலும் இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் வரும் 12 ம் தேதி மஞ்சு வாரியாரின் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த விபத்தால் அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.