மஞ்சிமா மோகனா இது.? ஆளே மாறிட்டாங்களே... அசத்தலான வீடியோ!

மஞ்சிமா மோகனா இது.? ஆளே மாறிட்டாங்களே... அசத்தலான வீடியோ!


manjima-mohan-insta-post-makes-fans-go-crazy

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். 2016 ஆம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். அதனைத் தொடர்ந்து சத்ரியன் மற்றும் இப்படை வெல்லும் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

manimamohan இவர் இளம் நடிகரும்  நவரச நாயகன் கார்த்திக்கின் மகனுமான கௌதம் கார்த்திக்கை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்தின் போது உடல் எடை கூடி குண்டாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த அவர் நமக்கு எது ஆரோக்கியமாக இருக்கிறதோ அதுவே சிறந்தது எனவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் நிவின் பாலி நடித்த வடக்கன் செல்ஃபி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். தற்போது இவர் எந்த திரைப்படங்களிலும் கமிட் ஆவதில்லை. அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் மட்டும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

manimamohanதிருமணத்திற்குப் பிறகு தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் மஞ்சிமா மோகன். அந்த வீடியோவில் இவர் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பதாகவும் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் ஆகிவிட்டாரா.? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.