பிக்பாஸ் குழு திடீர் சோதனை.! ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவாரா மணிகண்டன்.! பரபரப்பில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் குழு திடீர் சோதனை.! ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவாரா மணிகண்டன்.! பரபரப்பில் ரசிகர்கள்!!


manikandan-said-he-used-bluetooth-shoe-in-bigboss

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 5 சீசன்களை போல இந்த சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கிவருகிறார். 21 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சில நாட்களிலேயே ஜி.பி முத்து தானாக வெளியேறினார். அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளார், ஷெரினா மற்றும் கடந்த வாரம் மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான மணிகண்டன் தனது ஷூவில் ப்ளுடூத் இருப்பதாக கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிக்பாஸ் குழுவினர்களும் திடீரென வீட்டிற்குள் வந்து மணிகண்டனின் ஷூவை எடுத்துசென்று பரிசோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து மைனா, நிவாசினியிடம் பேசிய வீடியோ வைரலானது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் எந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் அனுமதி கிடையாது என்ற நிபந்தனை உள்ள நிலையில் மணிகண்டன் விதிமுறைகளை மீறி ப்ளூடூத் கொண்ட ஷூவை பயன்படுத்தினாரா? அப்படியென்றால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.