செத்துடுவேனோனு பயந்துட்டேன்.! ரொம்பவே சிரமப்பட்டேன்.! நடிகை மம்தா மோகன்தாஸ்க்கு இவ்வளவு கஷ்டங்களா!!
செத்துடுவேனோனு பயந்துட்டேன்.! ரொம்பவே சிரமப்பட்டேன்.! நடிகை மம்தா மோகன்தாஸ்க்கு இவ்வளவு கஷ்டங்களா!!

தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'சிவப்பதிகாரம்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். தொடர்ந்து அவர் 'குரு என் ஆளு', 'தடையற தாக்க', 'எனிமி' போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் மம்தா மோகன்தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்கு பிறகு அவர் அதிலிருந்து மீண்டுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "எனக்கு புற்றுநோய் வந்தபோது முதலில் எனது தோழிகளிடம்தான் அதை கூறினேன். எனக்கு அவர்கள் தைரியம் கொடுத்து பேசினார்கள். ஆனால் புற்றுநோய் வந்ததை எண்ணி நான் தனிமையில் இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதிருக்கேன்.எப்போதும் கேமரா முன்பு இருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.
ஏன் செத்துவிடுவோமோ என்று கூட பயந்தேன். அதனாலே எனது பிரச்சினையை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். யாராவது என் உடல் மீது இந்த மச்சங்கள் எப்படி என்று கேட்டால் எனது இன்ஸ்டாவை பாருங்கள் என முகத்தில் அறைந்த மாதிரி கூறிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.