275 நாட்களுக்கு பிறகு முதன்முதலாக வீட்டைவிட்டு வெளியே வந்த பிரபல நடிகர்! ஹாயாக சென்று என்னசெய்துள்ளார் பார்த்தீர்களா!



mamoothy-coming-out-from-home-after-275-days

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடியது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா பரவலை கட்டுபடுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.   இந்தியாவில் கேரளாவில்தான் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  மேலும் அங்குதான் அதிக கொரோனா பாதிப்பு  எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்நிலையில் அரசு விதித்த வழிமுறைகளை கடைப்பிடித்து நடிகர் மம்மூட்டி கடந்த ஒன்பது மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளாராம்.  மேலும் வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி செய்வது, காய், பழங்கள் பறிப்பது என புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 275 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்.

Mammotty

அதனை தொடர்ந்து அவர் தனது காரில் நண்பர்களுடன் ஜாலியாக ஒரு குட்டி பயணம் சென்றுள்ளாராம்.  மேலும்  அவர்களுடன் சேர்ந்து டீக்கடையில் ஒன்றாக ஹாயாக டீ குடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.