படப்பிடிப்பில் திடீர் விபத்து.. பிரபல நடிகர் மருத்துவமனையில் அவசர அனுமதி.!



Malayalam actor accident in shooting spot

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக அறியப்படுகிறார்.

actor

தமிழில் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் '2018' என்ற திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதனையடுத்து ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி இருந்த டொவினோ தாமஸ், சமீபத்தில் 'நடிகர் திலகம்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக திடீர் விபத்து ஏற்பட்டது.

actor

இதில் பலத்த காயமடைந்த நடிகர் டொவினோ தாமஸை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன்பின் மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு இரண்டு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.