படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த பேட்ட பட நாயகி..

படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த பேட்ட பட நாயகி..


malavika-mohanan-injured-in-shooting

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதன் பின்னர் பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

malavika mohanan

இந்நிலையில் இந்தியில் தயாராகி வரும் யுத்ரா படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன. மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டையில் எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது‌. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.