"அதை செய்யும்போது கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்."மாளவிகா மோகனன் கோரிக்கை.!

"அதை செய்யும்போது கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்."மாளவிகா மோகனன் கோரிக்கை.!


malavika-mohanan-about-her-dubbing

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்குகின்ற திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் நடிகை பார்வதி, ஹரி, பசுபதி, டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ள நிலையில் இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  

malavika mohanan

இந்த திரைப்படம் கேஜிஎப் பற்றிய திரைப்படம் என ஏற்கனவே பா.ரஞ்சித் கூறியதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியான நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. 

malavika mohanan

இப்படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில்,"டப்பிங் பணி பயங்கரமானது. நான் டப்பிங் செய்யும் போது என் கையை யாராவது பிடித்துக் கொள்ளுங்கள்."என்று பதிவிட்டுள்ளார்.