"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
மதுபோதையில் நான் செய்த தப்பெல்லாம்... உண்மையை உடைத்த பிரபல இளம்நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 4ஜி என்ற படத்தில் நடித்தவர் பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். அவர் மலையாளத்தில் சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவர்.
இந்த நிலையில் காயத்ரி சுரேஷ் தற்போது தனக்கு மதுப்பழக்கம் இருந்தது குறித்தும், ஆனால் அதனை தற்போது நிறுத்திவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து காயத்ரி சுரேஷ் கூறியதாவது, எனக்கு ஒரு காலத்தில் பயங்கரமாக மது அருந்தும் பழக்கம் இருந்தது. போதையில் நான் செய்த தவறுகளை மட்டும் கேட்காதீர்கள். அதை இப்போது சொல்வது சரியாக இருக்காது.
சுய நினைவுடன் அவற்றையெல்லாம் செய்யவில்லை. பின் எனது வாழ்க்கை, தொழில், உடல் தோற்றம், ஆரோக்கியம் ஆகியவற்றையெல்லாம் மனதில் வைத்து மதுப்பழக்கத்தை விட்டுவிட்டேன். மேலும் என்னுடன் மஹே என்ற படத்தில் இணைந்து நடித்த அனீஷ் மேனன் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார் என கேள்விப்பட்டேன். ஆனால் கேள்விப்படும் விஷயங்களையெல்லாம் உண்மை என சொல்லிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.