சினிமா

4வது கணவருடன் வீட்டில் கள்ளசாராயம் காய்ச்சிய பிரபல சீரியல் நடிகை! போலீசார் அதிரடி கைது!

Summary:

Malaiyala actress arrested for making liquor in home

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால் கூலி தொழிலாளர்கள் பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். 

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக மது கடைகள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால்  கேரள மாநிலத்தில் மதுகடைகளை திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  கேரளாவில் மது கிடைக்காமல் குடிமகன்கள் தவித்து வரும் நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளசாராயம் காய்ச்சி விற்றுவருகின்றனர். அவர்களை  போலீசார் தனிப்படை அமைத்து  கண்டுபிடித்து வருகிறார்கள். 

இந்நிலையில்  மலையாள டிவி நடிகை மஞ்சுசீனி என்பவர் தன்னுடைய வீட்டிலேயே நாலாவது கணவருடன் சாராயம் காய்ச்சி விற்றுள்ளார். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 10 ஆயிரம் மதிப்பிலான 75 லிட்டர் சாராயம் உருவாக்க தேவையான பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 

மேலும் ஊரடங்கில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால், பணத்திற்காக இந்த தொழிலை செய்ததாக நடிகை மஞ்சு சினி தெரிவித்துள்ளார். பின் இவர்கள் இருவரையும் போலீசார் கைது  செய்துள்ளார்கள்.


Advertisement