அட.. நம்ம விஜய் டிவி மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? முதன் முதலாக வெளியான புகைப்படம்!!

அட.. நம்ம விஜய் டிவி மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? முதன் முதலாக வெளியான புகைப்படம்!!


Makapa anand son photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பின்னர் சினிமாவில் களமிறங்கி பெருமளவில் பிரபலமானவர்கள் ஏராளம். மேலும் விஜய் தொலைக்காட்சி நடிகர்கள், நடிகைகளை போலவே பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்கள் ஏராளம்.

அந்த வரிசையில் தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து தற்போது பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். அதுவும் இவரும், பிரியங்காவும் சேர்ந்தாலே கலகலப்புக்கும், சிரிப்புக்கும் பஞ்சம் இருக்காது. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாகாபா ஆனந்த்  ஆங்கிலோ இந்திய பெண் சுசிலா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் மாகாபா முதல்முறையாக தனது மகனுடன் வீடியோ கேம் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.