ஈஸ்வர் உடனான கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகை மகாலட்சுமிக்கும் கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

ஈஸ்வர் உடனான கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகை மகாலட்சுமிக்கும் கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு!

சன் மியூசிக்  தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கிகள் அறிமுகமான காலகட்டத்திலிருந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான மகாலஷ்மி. இவரது ஆங்கரிங் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

மகாலட்சுமி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். படிப்பு முடிந்ததும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார் நடிகை மகாலட்சுமி.

அரசி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்து வருகிறார்.  இறுதியாக சன் டிவியில் தாமரை மற்றும் வாணி ராணி சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் தேவதையை கண்டேன் சீரியல் என்றும் பரபரப்பாக நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஈஸ்வருடன் கள்ளக்காதலில் இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் கொடுத்ததால் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். இதனால் அந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் தற்போது நடிகை மகாலட்சுமிக்கும் பிரமாண்ட தொலைக்காட்சியான சன் டிவியில் ராதிகா நடிக்கயிருக்கும் சித்தி 2 என்ற தொடரில் மகாலட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo