இது துளிகூட உண்மையில்லை! தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் மாதவன்!

இது துளிகூட உண்மையில்லை! தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் மாதவன்!


Madhavan not act as villain in pushpa movie

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மாதவன். அதனை தொடர்ந்து சாக்லேட் பாயாக வலம்வந்த அவர் மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால்,ரன், தம்பி, ரெண்டு, ஆர்யா, யாவரும் நலம் மற்றும் இறுதிச்சுற்று உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார். 

மேலும் தற்போது அனுஷ்காவுடன் இணைந்து அவர் நடித்துள்ள சைலென்ஸ் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் மாதவன் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.

ஆனால் அதற்கு நடிகர் மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை பகிர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதில் துளிகூட உண்மை இல்லை என பதிவிட்டுள்ளார். இதனால் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மாதவனை வில்லனாக பார்க்கலாம் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.