வில்லனாக அவதாரம் எடுக்கும் சாக்லேட் பாய் மாதவன்! ஹீரோ யாரு தெரியுமா? வெளியான புதிய தகவல்!!



madhavan-going-to-act-as-villain

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அலைபாயுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான காதல் திரைப்படங்களில் நடித்து இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார்.

பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ரன் படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கிய அவர் தம்பி, வேட்டை, விக்ரம் வேதா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

Madhavan
இந்நிலையில் தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் புதிய ஆக்சன் படம் ஒன்று உருவாக உள்ளது. இதில் கெத்தான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மாதவனை அனுப்பியுள்ளதாகவும், அவரும் கதையை கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.