சினிமா

ஒரே வரியில் தனது தந்தைக்கு ஆதரவாய் குரல் கொடுத்த வைரமுத்துவின் மகன், அப்படி என்னதான் கூறினார் தெரியுமா?

Summary:

madhan karky support to his father vairamuthu

வைரமுத்து-சின்மயி பாலியல் சர்ச்சை தொடர்பான விவாதத்தில் இதுநாள் வரை அமைதி காத்துவந்த பாடாலாசிரியர் மதன் கார்க்கி தனது தந்தைக்கு ஆதரவாக தற்போது ஒரு பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகமே பெரும் மரியாதை வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் அத்துமீற முயன்றதாக பாலியல் குற்றச்சாட்டு வைத்தார்.

இதையடுத்து மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது புகார் கூறினார்.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சின்மயிக்கு ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
மேலும் இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டு வைரமுத்துவும் அமைதியாகி விட்டார்.  

இந்நிலையில் இதுவரை அமைதிகாத்து வந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி தன் தந்தை மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக லிங்கா படத்தில் ரஜினிக்காக வைரமுத்து எழுதிய உண்மை ஒருநாள் வெல்லும் பாடலைப் பகிர்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த பாடலில் வரும் வரிகளான “பொய்கள் புயல்போல் வீசும்- ஆனால் உண்மை மெதுவாய் பேசும்” என்று தனது தந்தைக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.


 


Advertisement