பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு.! முன்னின்று தொடங்கி வைத்த பிரபலம்! வைரலாகும் புகைப்படங்கள்!!

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு.! முன்னின்று தொடங்கி வைத்த பிரபலம்! வைரலாகும் புகைப்படங்கள்!!


maaveeran-movie-shooting-starts-with-pooja

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர்  சிவகார்த்திகேயன். டான் படத்தை தொடர்ந்து அவர் பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக உக்ரைன்  நடிகை மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். இந்நிலையில் பிரின்ஸ் படம்  தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு  வெளியிட்டிருந்தது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Maaveeran

மாவீரன் படத்தில் ஹீரோயினாக, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. இந்த நிலையில் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MaaveeranMaaveeran