அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
மாவீரன் படத்தில் அரசியல் கருத்தா?; தொடரும் சர்ச்சையால் மனம் திறந்த இயக்குனர்; மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு சோதனை?.!
சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஸ்கின், யோகி பாபு உட்பட பலரின் நடிப்பில் நேற்று (ஜூலை 14, 2023) வெளியான திரைப்படம் மாவீரன். படத்தை அஸ்வின் சந்த்ரு இயக்கி இருந்தார்.
படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் திரையரங்கில் கூட்டம் அலைமோதி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில், படம் அரசியல் ரீதியாக கருத்துக்களை பேசியுள்ளதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மனம் திறந்த படத்தின் இயக்குனர், சென்னை கே.பி பார்க் குடியிருப்பு பிரச்சனையை மையமாக வைத்தே படம் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மாவீரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் அரசியல் ரீதியாக இதுவே கருத்து என எங்கும் கூறவில்லை.
சென்னையில் உள்ள கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையை உவமையாக வைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிற யாரையும் குறிப்பிட்டு நான் படம் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
கே.பி பார்க் குடியிருப்பில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட கட்டிடம் சரியாக இல்லை. மின்வசதி, குடிநீர் வசதி, லிப்ட் வசதி உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்படவில்லை. கட்டிடம் தரமற்று இருந்தது என புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.