சாய் பல்லவியால் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை! உலகளவில் முதலிடம் பிடித்த மாரி 2 !

சாய் பல்லவியால் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை! உலகளவில் முதலிடம் பிடித்த மாரி 2 !


maari-two-rowdy-baby-video-song-reached-130-million-vie

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மாரி 2 . மாரி முதல் பாகம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் மாரி 2 வெளியானது. முதல் பாகம் வெற்றிபெற்ற அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றிபெறவில்லை. முதல் பாகத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மாரி 2 படத்தில் கதாநாயகியான ப்ரேமம் பட புகழ் சாய் பல்லவி நடித்திருந்தார்.

படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாவிட்டாலும், படத்தில் வந்த ரௌடி பேபி பாடல் உலகளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், தனுஷ் பாடல் வரிகளில், தனுஷ், தீ பாடிய ரௌடி பேபி பாடல் யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 130 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.

Dhanush

உலகளவில் தமிழ் இசையின் பெயரை உயர செய்துள்ளது ரௌடி பேபி பாடல். முதன்முறையாக ஒரு தமிழ் வீடியோ பாடல், இந்த பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அனிருத் இசையில், தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் இந்த பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இசை, பாடல் வரிகள், பாடிய குரல்கள் என எல்லாம் ஒருபுறம் ப்ளஸாக அமைந்தாலும், சாய் பல்லவியின் நடனம் இந்த பாடலின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.