பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்! சக போட்டியாளரை மணந்த பிரபலம் வெளியிட்ட சந்தோஷமான செய்தி! குவியும் வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்! சக போட்டியாளரை மணந்த பிரபலம் வெளியிட்ட சந்தோஷமான செய்தி! குவியும் வாழ்த்துக்கள்!


Maaney and srinish couple become parent

மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருபவர் பேர்ல் மானே. இவர் நடிப்பது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக  கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கினார். அப்பொழுது பேர்ல் மானேவுக்கு  பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த சக போட்டியாளரான மற்றொரு தொலைக்காட்சி நடிகர் ஸ்ரீனிஷ்  அரவிந்த் என்பவருடன் காதல் ஏற்பட்டது. 

bigboss

மேலும் பிக்பாஸ் வீட்டில் மலரும் காதல் தொடராது என பலரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில்,  வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவர்கள் தங்களது காதலை தொடர்ந்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில் தற்போது பேர்ல் மானே கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் இன்று, அவரது ஒரு புனிதமான பகுதி என்னுள் வளர்கிறது. குழந்தைக்கு உங்களின் பிரார்த்தனையும், ஆசியும் தேவை. மார்ச் மாதம் எங்கள் குழந்தை  வந்துவிடும் என உற்சாகமாக  கூறியுள்ளார்.