சிம்பு பட தயாரிப்பாளர் எடுத்த புதிய முயற்சி! திரைத்துறையினர் பாராட்டுMaanadu producer insure for employees

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் காப்பீடு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்டிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி மற்றும் 10 பேர் காயமடைந்த சம்பவம் திரைத்துறை வட்டாரங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இத்தகைய விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் பலரும் குரல் எழுப்பினர்.

Maanadu

இதுகுறித்து கடிதம் எழுதிய நடிகர் கமல்ஹாசன் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீட்டை தயாரிப்பு நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் படத்தில் பணிபுரியும் அனைவருக்கும் காப்பீடு வழங்க தயாரிப்பு நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி முதல் துவங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 30 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டினை 7.8 லட்சம் ரூபாய் செலுத்தி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெற்றுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.