27 ஆண்டுகள் கழித்து அசத்தல்.. மலேசியா வாசுதேவனின் குரலில் வேட்டையன் பட பாடல்.!
டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் அட்டகாசமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan).
இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ரமேஷ் திலக், அபிராமி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
மனசில்லையோ பாடல்
இப்படம் தீபாவளியை முன்னிட்டு 10 அக்டோபர் 2024 அன்று வெளியாகிறது. படம் ரூ.160 கொடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதே நாளில் சூர்யாவின் கங்குவா வெளியாகுவதாக இருந்த நிலையில், அப்படம் ரஜினிக்காக தள்ளிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நலிந்த கலைஞர்களின் கோரிக்கைகளுக்கு உதவ மறுக்கும் நடிகர் சங்கம்? - லொள்ளு சபா மனோகர் கண்ணீருடன் வேதனை.!
இந்நிலையில், படத்தின் மனசில்லையோ பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், இப்பாடலுக்காக 27 ஆண்டுகள் கழித்து மலேஷியா வாசுதேவனின் பின்னணி குரலை ரஜினிக்கு இணைத்து இருக்கிறது. இந்த படத்தின் முழு பாடல் நாளை (செப் 09, 2024) மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.
Bringing back the legendary MALAYSIA VASUDEVAN’s 🎤 voice for SUPERSTAR 🌟 after 27 years! #MANASILAAYO 🥁 from VETTAIYAN 🕶️ Full song releasing tomorrow at 5PM 🕔 #Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan… pic.twitter.com/xXq7i6eLYl
— Lyca Productions (@LycaProductions) September 8, 2024
இதையும் படிங்க: விநாயகரை அஜித் கொண்டாடிய அளவிற்கு ஏன் விஜய் கொண்டாடவில்லை? - புளூசட்டை மாறன் கேள்வி.!