இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது; லைக்கா நிறுவனம் அறிவிப்பு.!

இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது; லைக்கா நிறுவனம் அறிவிப்பு.!


Lyca Announce Indian 2 Update on 29 Oct 2023 11 AM

 

லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிரூத் இசையில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2.

கடந்த 1996ம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகிய இந்தியன் திரைப்படம் இன்று வரை பாராட்டப்படும் நிலையில், அதனைத்தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமும் படமாக்கப்பட்டது. பல பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கு நடுவே படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

படம் விரைவில் திரையங்குகளில் வெளியாகி, உலகளவில் மாபெரும் சாதனையை படைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. ஏனெனில், நடிகர் கமல் ஹாசன் படத்தை பார்த்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் மனதார பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், படத்தின் முக்கிய அப்டேட் நாளை (29 அக். 2023) அன்று, காலை 11 மணியளவில் வெளியாகும் என படத்தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.