
losliyaa cried in bigboss
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாளிலேயே அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான சரவணன் மீனாட்சி புகழ் கவின் நிகச்சி தொடங்கிய ஒரு சில நாளிலேயே அபிராமியிடம் நெருக்கமாக இருந்தார். பின்னர் சாக்ஷியுடன் ஒட்டி உறவாடினார்.பின்னர் தற்போது சாக்ஷியை விட்டுவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.ஆனால் லாஸ்லியா கவினிடமிருந்து விலகி செல்கிறார். ஆனாலும் கவின் தானாக சென்று அவரிடம் பேசி வருகிறார்.
இது சாக்ஷிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து கடுமையாக வனிதா பேசியதை கேட்ட லாஸ்லியா கடுப்பாகி வெளியே செல்ல கவின் பின்னாலேயே செல்கிறார். அப்பொழுது லாஸ்லியா கவினிடம் நீ இனிமேல் என்னோட கதைக்காதே என்று கூறி கண்கலங்கியுள்ளார். அந்த வீடியோ பிரமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Day18 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/cktwTxW8BQ
— Vijay Television (@vijaytelevision) 11 July 2019
Advertisement
Advertisement