கவினுடன் பிரேக்-அப் ஆனது இதனால்தான்! முதன்முதலாக உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா! வைரலாகும் வீடியோ!!Losliya talk about break up with kavin

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் லாஸ்லியா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தனது சக போட்டியாளரும், நடிகருமான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். மேலும் அதற்காக FREEZE டாஸ்கில் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை அவரைக் கண்டித்தார்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததற்குப் பிறகு இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை, பேசிக் கொள்வதும் இல்லை. அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கவின் உடனான பிரிவு குறித்து லாஸ்லியா முதன்முறையாக அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, நாங்கள் இருவரும் உறவில் இருந்தது உண்மைதான். ஆனால் எங்களுக்குள் ஒத்துவரவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்தபோது பிடித்திருந்தது. ஆனால் வெளியில் வந்த பிறகு எல்லாமே வேறுமாதிரி இருந்தது. எங்கள் இருவருக்குமே ஒத்துவரவில்லை. அதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.