பேட்டியில் கவினை குறித்து மனம் திறந்த லாஸ்லியா..Losliya openup about kavin

இலங்கையின் கிளிநொச்சியை சேர்ந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் அங்கு நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

losliya

அதே போல் நடிகர் கவின், விஜய் டிவியின் "கனா காணும் காலங்கள்" என்ற தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் இவரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் காதல் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், கவின் வேறொரு பெண்ணை காதலித்து மணந்தார்.

losliya

அதுகுறித்து மனம் திறந்த லாஸ்லியா, "கவினுக்கு திருமணம் நடந்தது எனக்கு மகிழ்ச்சியே. எல்லோரும் முன்பு நடந்தை வைத்து இப்போதும் பேசுவது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. கவின் சந்தோஷமாக இருக்கிறார். நானும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று லாஸ்லியா மனம் திறந்து பேசியுள்ளார்.