லாஸ்லியாவின் கணவரா இவர்.! திருமணக்கோலத்தில் வைரலாகும் புகைப்படம்!! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்!!



losliya marriage photo leaked

 பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாளிலேயே அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத  குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.

losliya

இந்நிலையில் லாஸ்லியா மிக மோசமானவர்.அவருக்கு திருமணம் நடந்துவிட்டது, அவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என லாஸ்லியாவின் பள்ளிவகுப்பு தோழி என நபர் ஒருவர் பதிவுகளை வெளியிட்டார்.

மேலும் லொஸ்லியா திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

losliya

இந்நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மார்ப் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபரின் உண்மையான புகைப்படமும் வெளியாகி வைரலாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.