சினிமா

அடஅட! புதுசா பூத்த ரோஜா மாதிரி.. இளசுகளை குளிர வைத்த லாஸ்லியா!! என்னம்மா இருக்காரு பார்த்தீர்களா!!

Summary:

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள்

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த சில நாட்களிலேயே அவரின் பாடலும் ஆடலும் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. மேலும் அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது. 

ஆனால் நாளடைவில் அவர் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ரசிகர்களால் பெருமளவில் விமர்சிக்கப்பட்டார். நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற இவருக்கு பின்னர் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப், தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது பிங்க் உடையில் ரோஜா பூப்போல செம கியூட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி  பார்ப்போர் கண்களை குளிர வைத்துள்ளது. 


Advertisement