சினிமா

சூட்டிங் ஸ்பாட்டில் காலடி எடுத்து வைத்த லாஸ்லியா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Losliya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே சென்றவர் லாஸ்லியா. அடிப்படையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் உள்ளே சென்றார்.

இவர் வீட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களுக்குள் இவருக்கு ஏகப்படியான ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது. மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார். இந்நிலையில் தற்போது ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஒரு படத்தில் முதன் முறையாக சினிமாவில் நடிக்கவுள்ளார்.

தற்போது அவர் படப்பிடிப்பு தளத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதனை புகைப்படமாக எடுத்து ஆக்சன் என கூறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement