சினிமா

என்னப்பா அச்சு அசல் நம்ம அனிருத் மாறியே இருக்காரு... வைரலாகும் புகைப்படம்!!

Summary:

என்னப்பா அச்சு அசல் நம்ம அனிருத் மாறியே இருக்காரு... வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் இவரது இசையில் வெளிவந்த ஓய் திஸ் கொலவெறி பாடல் அனைத்து மக்கள் மனதையும் பெருமளவில் கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. மேலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தது.

பின்னர் அனிருத் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். தனது அசத்தலான இசையால் இளைஞர்களை கவர்ந்த அனிருத் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

இந்நிலையில் சமீப காலமாக அச்சு அசல் பிரபலங்களை போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இளம் இசையமைப்பாளர் அனிருத் போலவே இருக்கும் நபரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் நம்ம அனிருத் மாறியே இருக்காரு என கூறி ஷாக்காகி வருகின்றனர்.


Advertisement