ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ப்ளூ சட்டை மாறனின் டீவீட்... தமிழ் சினிமாவின் டாப் 4 நடிகர்கள் பட்டியல்... சூப்பர் ஸ்டாருக்கு எந்த இடம் தெரியுமா.?
தமிழ் சினிமா என்றாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் நான்கு பேரும் தவிர்க்க முடியாத கதாநாயகர்கள். ரஜினி-கமல் காலத்திற்குப் பிறகு விஜய்-அஜித் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சர்ச்சை கூடிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாக முதல் நான்கு இடங்களில் இருக்கும் நடிகர்களின் பட்டியலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்திலிருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் அவரது இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் விஜய், கமல்ஹாசன் மற்றும் அஜித் ஆகியோரின் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று பெரிய அளவில் வசூல் செய்தன.
.
Top 4 Tamil heroes - Ranking (Businesswise). Current position:
— Blue Sattai Maran (@tamiltalkies) July 28, 2023
1. Vijay
2. Kamal
3. Ajith
4. Rajini. pic.twitter.com/I6fKpQ8hR6
இந்த தகவல்களின் அடிப்படையில் ப்ளூ சட்டை மாறன் வியாபார ரீதியாக தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு முதலிடத்தை கொடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் மூன்றாவது இடத்தை அஜித்துக்கும் கடைசி இடத்தை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அவர் கொடுத்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் இந்த பட்டியல் மாறலாம்.