சினிமா

நடிகர் கவினுக்காக ஒன்றுசேர்ந்த 6 முன்னணி இயக்குனர்கள்! மிரட்டும் லிஃப்ட் மோஷன் போஸ்டர்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மதில் பிரபலமானவர்

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மதில் பிரபலமானவர் நடிகர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி பெரும் விமர்சனங்களை சந்தித்த அவர் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிப்பதில் தீவிரமாக உள்ளார்.

இந்நிலையில் நடிகர் கவின் தற்போது வினீத் பிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். திகிலூட்டும் வகையில் அமைத்துள்ள இந்த மோஷன் போஸ்டரில் கவின் மற்றும் ஹீரோயின் முகத்தில் ரத்தம் வடிய மிரண்டுபோய் காணப்படுகின்றனர். இந்த மோஷன் போஸ்டர் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Advertisement