தலைவர் ரசிகர்களே தயாரா? தர்பார் படக்குழு தெறிக்கவிட்ட முதல் புல்லட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தலைவர் ரசிகர்களே தயாரா? தர்பார் படக்குழு தெறிக்கவிட்ட முதல் புல்லட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!


lica production new announcement about tharbaar

 பேட்ட படத்தை தொடர்ந்து  ரஜினிகாந்த் AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் இதில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துவருகிறார். அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இதன் பட பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும், படத்தின் இசை வெளியீட்டுவிழா அடுத்த மாதம் நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

Tharbar

இந்நிலையில் லைகா புரொடக்ஷன் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புல்லட் நம்பர் 1, தலைவர் ரசிகர்கள் தயாராக இருங்கள். நாளை தர்பார் குறித்த தகவல் வெளிவரவுள்ளது என கூறியுள்ளனர். அதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.