எல்.ஐ.சி; விஜய் சேதுபதியின் ரீல் மகளுடன் ஜோடி சேரும் லவ் டுடே நாயகன்.! வைரலாகும் புகைப்படங்கள்!!

எல்.ஐ.சி; விஜய் சேதுபதியின் ரீல் மகளுடன் ஜோடி சேரும் லவ் டுடே நாயகன்.! வைரலாகும் புகைப்படங்கள்!!



lic movie shooting pooja photo viral

கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். மேலும் ரசிகர்களிடையே இப்படம் வரவேற்பு பெற்ற நிலையில் அவர் முன்னணி இயக்குனராக வலம் வரத் தொடங்கினார்.

 இந்நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் (எல்.ஐ.சி) லவ் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்கிறார். பிரதீப் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமடைந்தவர். மேலும் லவ் டுடே படத்தில் ஹீரோவாகவும் அசத்தலாக நடித்திருந்தார். எல்.ஐ.சி படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இவர் தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த உப்பன்னா படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.