விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. இன்று வெளியாகவிருக்கும் லியோ அப்டேட்.!
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. இன்று வெளியாகவிருக்கும் லியோ அப்டேட்.!

கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் முதன்முதலில் 'மாநகரம்' திரைப்படத்தில் இயக்குனராக இருந்தார். ஆனால் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் சில வருடங்களுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படத்தை இயக்கியிருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. மேலும் விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கினார். இதன்பின் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி மிகப்பெரும் இயக்குனராக கோலிவுட் திரைத்துறையில் வலம் வந்தார்.
இது போன்ற நிலையில், தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், நிவின் பாலி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து லியோவின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் லோகேஷ் கனகராஜ் 'லியோ'அப்டேட் இன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இச்செய்தி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்துள்ளது.