#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
"லியோ செட்டில் எங்களை அசிங்கப்படுத்துறாங்க" மனக்குமுறலுடன் காவல் நிலையத்தில் புகாரளித்த லியோபட நடன கலைஞர்கள்..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு சில காரணங்களினால் ரத்தானது. இதன்பின்பு சமீபத்தில் 'லியோ' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதில் விஜய் பேசிய வசனத்தால் சர்ச்சைகள் கிளம்பியது.
இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது லியோ திரைப்படத்தில் நடனமாடிய கலைஞர்களை அசிங்கபடுத்தியதாகவும், அவர்களுக்கு வெறும் 800 ரூபாய் மட்டும் சம்பளமாக அளித்ததாகவும் கூறிவருகின்றனர்.
மேலும் மிகக் குறைந்த சம்பளம் அளித்துவிட்டு காரணம் கேட்டால் பதிலளிக்க மறுப்பதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் நிலையத்திலும் இவர்களது புகாரை ஏற்க வில்லை என்று பத்திரிகையாளர்களிடம் முறையிட்டு வருகின்றனர். இப்பிரச்சனை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.