இவன் யாரென்று தெரிகின்றதா.?! வேறலெவலில், லெஜண்ட் சரவணன்  கம்பேக்.!

இவன் யாரென்று தெரிகின்றதா.?! வேறலெவலில், லெஜண்ட் சரவணன்  கம்பேக்.!


Legend saravanan latest come back photos goes Viral on social media

பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் தொடக்கத்தில் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனையடுத்து லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

Legend saravanan

அந்த திரைப்படமும் ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஹீரோவானதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, லெஜெண்ட் சரவணாவை வைத்து இயக்குனர் துரை செந்தில்குமார் புதிய திரைப்படம் ஒன்றை  இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இயக்குனர் துரை செந்தில்குமார் இதுவரை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் அவர்கள் தனது உறவினர் வீட்டின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என அறிவித்துள்ளார்.